திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி அருகே வல்லம் சித்தேரி என்ற கிராமம் அமைந்துள்ளது. இதில், விவசாய கூலி தொழிலாளியாக இருப்பவர் ஒருவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வேப்ப மரத்தை வெட்டி இருக்கின்றார். அப்போது அங்கிருந்து ஆறடி நீளம் கொண்ட ஒரு நல்ல பாம்பு வெளிவந்ததை அடுத்து அவர் அங்கிருந்து பதறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளார்.
சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது அங்கு பாம்பு இல்லை. எனவே, தொடர்ந்து அந்த வேப்ப மரத்தை அப்புறப்படுத்த தொடங்கினார். மறுநாள் அந்த பகுதிக்கு வந்த சில மக்கள் அங்கே வேப்பமரம் வெட்டப்பட்ட இடத்தில் பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
வேப்பமரம் வெட்டிய பின்னும் பாம்பு அப்பகுதியில் சுற்றி சுற்றி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மன் பாம்பு வடிவத்தில் இருந்து கொண்டு அருள் கொடுப்பதாக மக்கள் நம்ப துவங்கினர் .௧
5 நாட்களுக்கும் மேலாக அதே இடத்தில் பாம்பு இருப்பதால் அந்த இடத்தில் மக்கள் பாலூற்றி முட்டை வைத்து பூஜை செய்ய ஆரம்பித்து விட்டனர். இது குறித்து சுற்றுவட்டார பகுதிகளில் தகவல் பரவத் துவங்கியது. எனவே, அங்கிருக்கும் அனைவரும் படையெடுத்து வந்து பூஜை செய்து வருகின்றனர்.