உலகின் பல இடங்களில் அடிக்கடி பூகம்பம் ஏற்படுவது வழக்கம். அப்படி ஏற்படக்கூடிய இந்த பூகம்பத்தை பாம்புகள் கூட கணிக்க உதவுகின்றன. அதாவது 75 மைல் தொலைவில் (121 கிலோமீட்டர்) இருந்து வரும் பூகம்பத்தை ஐந்து நாட்களுக்கு முன்பே பாம்புகள் உணர முடியுமாம். இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
பூகம்பங்களுக்கு முன்னர் விலங்குகள் பல்வேறு அறிகுறிகளை உணர்வதாக பல்லாயிரம் ஆண்டுகளாக தகவல்கள் பரவுகின்றன. அதாவது பூகம்பத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், அனைத்து விலங்குகளும் கிளர்ச்சியுடன் செயல்படத் தொடங்குகின்றன. நாய்கள் எந்த காரணமும் இல்லாமல் அலறுகின்றன, குதிரைகள் பக் சத்தமிடுகின்றன, மீன்கள் வட்டமாக நீந்துகின்றன, பாம்புகள் அதன் கூட்டை விட்டு வெளியேறுகின்றன என பல தகவல்கள் உள்ளன. உதாரணமாக 1975 ஆம் ஆண்டில் சீனாவில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட போது விலங்குகளின் விசித்திரமான நடத்தையின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதாக கூறப்படுகிறது.
மேலும் 2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் சுனாமி அலைகளின் தாக்கத்திற்கு முன்னர் விலங்குகள் தப்பிச் சென்றதாக பல தகவல்கள் கூறுகின்றன. ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டபின் சாதாரண விலங்குகளின் நடத்தையில் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பல தகவல்கள் கலிபோர்னியா பல்கலைக்கழக அமைப்பின் ஆராய்ச்சியாளர்களை ஆய்வு செய்ய வழிவகுத்தன. அதன்பின்னர் விலங்கு உரிமையாளர்களுன் மேற்கொண்ட நூற்றுக்கணக்கான நேர்காணல்களில், ஒரு நடுக்கம் ஏற்படுவதற்கு முன்னர் விலங்குகளில் சில மாற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பூகம்பங்கள் தாக்கிய பின்னர் சில நேர்மறையான அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுனாமி குறித்து ஆராயும் போது யானைகள் கடற்கரைக்கு அருகில் கூட நகர்ந்துள்ளன. அலை தாக்கிய நேரத்தில் மட்டுமே அவை உள்நாட்டிற்க்குள் நகர்ந்துள்ளன. மேலும், ஆராய்ச்சியாளர்கள் விலங்குகள் பூகம்பங்களைக் கண்டறியும் எந்தவொரு நம்பத்தகுந்த விஷயத்தையும் கண்டுபிடிக்கவில்லை என கூறுகின்றனர். பூகம்ப அலைகள் ஒலியை விட வேகமாக பயணிக்கின்றன, எனவே விலங்குகள் அவற்றைக் கேட்க உண்மையான வழி இல்லை.
ஆகவே இது குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டு வருகின்றன. மேலும் விசித்திரமான நடத்தைகளைக் கண்டறிய சீன நாட்டில் ஒரு பாம்பு பண்ணையில் 24 மணி நேர கண்காணிப்பை நிறுவியுள்ளது. ஜப்பானிய அதிகாரிகள் கேட்ஃபிஷுடன் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே பூகம்பம் ஏற்பட போவதை பாம்புகள் ஐந்து நாள்களுக்கு கணிக்க முடியும் என்று கூறப்பட்டாலும் அது குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன.