fbpx

இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள்..!! பள்ளிகள் திறக்கப்படும்போது 5 லட்சம்..!! மாஸ் காட்டும் தமிழ்நாடு அரசு..!!

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள், உயர்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்படும். வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை மார்ச் 1ஆம் தேதி தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தியிருந்தார்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதுடன், மதிய உணவுடன், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், 2024-25ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 5 லட்சம் மாணவ, மாணவியரை சேர்க்க பள்ளிக்கல்வித்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

அதன்படி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கடந்த மார்ச் 1ஆம் தேதி சென்னையில் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நடந்தது. அந்த வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3,27,940 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். மீண்டும் பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்படும் போது 5 லட்சம் பேர் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : நொந்துபோன செந்தில் பாலாஜி..!! 36-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!!

Chella

Next Post

'வேகமாக பரவும் வைரஸால் உலகின் சாக்லேட் சப்ளை பாதிக்க வாய்ப்பு' ; ஆய்வில் தகவல்!

Tue Apr 30 , 2024
மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள கோகோ மரங்களில் ஒரு கொடிய வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், வரும் காலத்தில் இது சாக்லேட் உற்பத்தியை மிகக் கடுமையாகப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள கோகோ மரங்களில் இருந்து தான் சாக்லேட் தயாரிக்கத் தேவையான கோகோ பீன்ஸ் உற்பத்தி செய்கின்றன. உலகில் உற்பத்தி செய்யப்படும் சாக்லேட்டில் பாதி அளவுக்குத் தேவையான கோகோ பீன்ஸ்கள் கானா மற்றும் கோட் டி ஐவரியில் நாடுகளில் […]

You May Like