fbpx

தமிழகத்திற்கு மட்டும் இதுவரை 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு…! நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்…!

தேசிய சமூக உதவித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உட்பட தமிழ்நாட்டில் 8 மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு சென்ற நிதியாண்டில் சுமார் 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து தமிழ்நாட்டில் இதுவரை 92.22 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார். இதே போல் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 7,79,851 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 7,57,672 வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2023 டிசம்பர் 6 நிலவரப்படி 5,83,813 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தமிழ்நாட்டில் 39 லட்சத்து 69 ஆயிரம் குடும்பங்கள் மூலம் 3 லட்சத்து 34 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனங்கள் மூலம் 2,71,775 பேர் பயிற்சி பெற்று 2 லட்சத்து 47 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

தேசிய சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 20 லட்சத்து 5 ஆயிரத்து 691 பேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 2022 – 2023 நிதியாண்டில் 19 லட்சத்து 51 ஆயிரத்து 42 பயனாளிகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். பிரதமரின் விவசாய நீர்ப்பாசன திட்டம் – 2.0 மூலம் தமிழ்நாட்டில் 2021 – 2022 நிதியாண்டிலிருந்து 2023 – 2024 நிதியாண்டின் பாதி காலம் வரை 14ஆயிரத்து 146 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என நாடாளுமன்றத்தில் மத்திய இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

நடத்தையில் சந்தேகம்.! தலையுடன் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த கணவன்.!!

Fri Dec 15 , 2023
கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்து விட்டு அவரது தலையுடன் காவல் நிலையம் வந்த கணவனால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . ஒடிசா மாநிலத்தின் நாயகர் மாவட்டத்தை சேர்ந்த 35 வயதான அர்ஜுன் பாகா என்பவர் தனது மனைவி தரித்ரி என்பருடன் வசித்து வந்தார். இந்நிலையில் தனது மனைவியின் நடத்தையில் அர்ஜுனுக்கு அடிக்கடி சந்தேகம் […]

You May Like