fbpx

88% 2000 ரூபாய் நோட்டுக்கள் வாபஸ்…..! மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்த முக்கிய தகவல்…..!

கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் மாதம் 16ஆம் தேதி மத்திய அரசு திடீரென்று பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது. அதன்படி புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த சூழலில் தான் திடீரென்று கடந்த மே மாதம் உலகத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.. அதன் அடிப்படையில், அனைத்து வங்கி கிளைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி சில்லறையாக பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது வங்கி கணக்கில் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.ஆகவே நேற்று வரையில் சுமார் 3. 14 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் வாபஸ் பெறப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மே மாதம் 19 ஆம் தேதி நிலவரத்தின் அடிப்படையில், புழக்கத்தில் இருந்த 3.56 லட்சம் லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகளில் இதுவரையில் 3.14 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் வாபஸ் பெறப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்த நோட்டுகளில் இது 88 சதவீதம் என்றும் கூறப்பட்டுள்ளது.இன்னும் 42000 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Next Post

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு…..! கைக்கோர்த்த ஓபிஎஸ் டிடிவி நடக்கப்போவது என்ன…..?

Tue Aug 1 , 2023
கடந்த 2017 ஆம் வருடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை கிடப்பில் போடப்பட்ட நிலையில், திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற உடன் இந்த வழக்கில் விசாரணை சூடு பிடிக்க தொடங்கியது. இந்த நிலையில் […]

You May Like