மருத்துவ குணம் நிறைந்துள்ள சுண்டைக்காயில் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
செரிமானமின்மை, வயிறு மந்தம் , வயிற்றுக்கோளாறு போன்ற வயிற்றுத் தொந்தரவுகளை சரிசெய்ய சுண்டைக்காய் நல்ல மருத்துவ பலனாக இருக்கும். இதனை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகளை அழித்து குடல், வயிறு சுத்தமாகும்.சிலருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் பசி உணர்வு குறைந்து விடும். சுண்டைக்காய்களை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுபவர்களுக்கு பசி உணர்வு அதிகமாகி உடல் ஆரோக்கியம் மேம்படும்.
சுண்டைக்காய் வத்தலாக சாப்பிடுவதைவிட அதை பச்சையாக குழம்பு வைத்து சாப்பிட்டால் பல நன்மைகளை பெற முடியும். குறிப்பாக சுண்டைக்காயை வைத்து சாம்பார், காரக்குழம்பு வைத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். கசப்பாகத்தான் இருக்கும் என்றாலும் அதன் நன்மைகள் உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றன. சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் இவற்றை சம எடையாக எடுத்து, நன்கு காயவைத்து, வறுத்து, இடித்துத் தூள் செய்துக் கொள்ள வேண்டும். இதனை, 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோருடன் கலந்து காலை, மாலை வேளைகளில், இரண்டு நாட்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு நிற்கும்.
கால்சியம் சத்து அதிகமுள்ள சுண்டைக்காயை அவ்வபோது சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானம், எலும்பின் உறுதித்தன்மையை இழப்பு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பச்சையான இளம் சுண்டைக்காய்களை மிதமான காரம் பயன்படுத்தி குழம்பு செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வருவதால் மூலம் பிரச்சனை விரைவில் நீங்கும்.பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து சுண்டைக்காய் காரக்குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் சாப்பிட்டு வந்தால் தொண்டை, நெஞ்சில் ஏற்படும் சளிக்கட்டு குறையும்.