இன்ஸ்டாகிராம், யூ டியூப் போன்ற சமூக ஊடக தளங்களில் அதிக ஃபாலோயர்களை கொண்ட சமூக ஊடக பிரபலங்கள், பிரபலமான பல நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்ற அவற்றின் தயாரிப்புகளுக்கு ஆதரவாக விளம்பரம் செய்வதாக கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து சமூக ஊடக பிரபலங்களுக்கான சில வழிகாட்டுதல்களை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது.. அதன்படி, சமூக ஊடக பிரபலங்கள் பணம் வாங்கிய பிறகு எந்த பிராண்டிற்கும் ஒப்புதல் அளித்தால், அவர்கள் அந்த பிராண்டுடன் தங்கள் தொடர்பை அறிவிக்க வேண்டும்

சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள், பிரபலங்கள் மற்றும் மெய்நிகர் செல்வாக்கு செலுத்துபவர்களுக்கும் கூட இந்த புதிய விதிகள் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது… இந்த புதிய வழிகாட்டுதல்களுக்கு இணங்காத பட்சத்தில் சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் ( Social Media Influencers) ரூ. 10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவித்திருந்தது.. முதல் முறை மீறினால் ரூ.10 லட்சம் அபராதம், இரண்டாவது முறை ரூ.20 லட்சம், தொடர்ந்து மீறினால் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும்..
இந்நிலையில் சமூக ஊடகத் தளத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளை அங்கீகரிக்கும் பிரபலங்கள், விளம்பரம், ஸ்பான்சர், ஒத்துழைப்பு அல்லது கட்டண விளம்பரம் போன்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், பணம் செலுத்திய அல்லது பண்டமாற்று பிராண்ட் ஒப்புதலுக்கு, advertisement”, “ad,” “sponsored”, “collaboration”, or “partnership” போன்ற வார்த்தைகளை பயன்படுத்தலாம்…
இருப்பினும், இந்த சொல் ஹேஷ்டேக் அல்லது வீடியோவின் தலைப்பில் குறிப்பிடப்பட வேண்டும். எளிமையான, தெளிவான மொழியில் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.. தனிநபர்கள் தாங்கள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தாத எந்தவொரு பொருளையும் அங்கீகரிக்கக் கூடாது.
சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் காண்பிக்கும் தயாரிப்பின் விளம்பரத்திற்காக பணம் பெற்றிருந்தால், அதனை தங்களைப் பின்தொடர்பவர்களுக்கு தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை எதிர்கொள்வார்கள். ஒப்புதல் அளிப்பதற்கு முன், தயாரிப்பு மற்றும் சேவையை உண்மையில் பயன்படுத்தியிருக்க வேண்டும். தவறும் பட்சத்தில், நுகர்வோர் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும்..” என்று தெரிவிக்கப்ப[ட்டுள்ளது.