தீவிரவாதிகள் தொழில்நுட்பத்தை முக்கிய கருவியா பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் சமூக ஊடகங்கள் தீவிரவாதிகளுக்கு முக்கியமான கருவியாக உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் யு.என்.சி.-ன். பயங்கரவாத எதிர்ப்புக் குழு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சகங்ர் கூறுகையில் தீவிரவாதிகள் ’ தொழில்நுட்பம் , பணம் ,சுதந்திரத்தை கெடுக்க ஒரு சமூகத்தில் சுதந்திரத்தை தாக்க , சகிப்புத்தன்மை, முன்னேற்றத்தை தடுத்தல் ’ போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை தீவிரவாதிகள் தவறாகப் பயன்படுத்துவதை எடுத்துக்காட்டி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். சமூக ஊடக தளங்களும் , இணையமும் தற்போது தீவிரமயமாக்கலுக்கும் சமூகத்தை சீர்குலைக்கும் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
தீவிரவாத குழுக்களின் கருவிகளின் சக்திவாய்ந்த கருவியாக சமூக வலைத்தலங்கள் , இணையதளம் உருவாகிவிட்டது. உறுப்பு நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு திட்டங்களுக்கு உதவியாக ஐ.நா. அறக்கட்டளை நிதியமைப்பிற்கு இந்தியா அரை மில்லியன் டாலர்கள் இந்தியா சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வில் தீவிரவாத எதிர்ப்பு அமைப்பு செயல்படுவதும் தீவிரவாதத்தை வளர்க்கும் நாடுகளாக மாறிவரும் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது . என பாகிஸ்தான்போன்ற நாடுகளை எடுத்துக்காட்டி பேசியுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் , தொழில்நுட்பம் அரசாங்கத்திற்கு புதிய சவால்களாக உள்ளது. குறிப்பாக ’ சுற்றுச்சூழலின் புதிய ஒழுங்குமுறை’ க்கு இது சவால்விடும் வகையில் உள்ளது. ஆளில்லா வான் வழி அமைப்புகளின் கட்டுப்பாடற்ற பயன்பாட்டினால் அபாயம் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார். அதாவது தொழில்நுட்பத்தை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்வதால் யார் வேண்டுமானாலும் கையாளுகின்றனர். அத்துடன் ஆளில்லா வான் வழி அமைப்பை தவறான விவகாரத்திற்கு பயன்படுத்துகின்றனர். ஆயுதங்கள் , வெடி பொருட்கள் விநியோகம் மற்றும் இலக்கை தாக்குதல் போன்றவற்றை பயங்கர வாத குழுக்கள் ட்ரோன் போன்றவற்றை பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.