fbpx

தென்னகத்தின் சாக்ரட்டீஸ், சமூகச் சீர்திருத்தவாதி..!! பெரியார் பாதையில் பயணிப்போம்..!! தவெக தலைவர் விஜய் உறுதி..!!

தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 தமிழ்நாடு முழுவதும் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடந்த 2021இல் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி, ஆண்டுதோறும் செப்.17ஆம் தேதி சமூக நீதி நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று பெரியார் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ”சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்.

மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர். சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் பிறந்த நாளில் அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்” என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Read More : நண்பர்கள் குழுவில் கடன் கேட்ட கிரண்..!! பணம் தருகிறோம்… ஒரு நைட் வரியா..? அதிர்ச்சி சம்பவம்..!!

English Summary

Let us commit to travel the path of women’s rights, women’s education, women’s safety, equality, equal rights and social justice

Chella

Next Post

நிபா வைரஸால் மாணவர் பலி!. கேரளாவில் பள்ளி, கல்லூரிகள் மூடல்!. காலவரையின்றி விடுமுறை அறிவிப்பு!

Tue Sep 17 , 2024
Many Schools & colleges closed due to Nipah virus in Kerala..!?

You May Like