வீடுகளில் தாங்களாகவோ அல்லது அவரவர் விரும்பும் வியாபாரியிடமிருந்தோ இந்த மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தித் தகடுகளை பொருத்திக் கொள்ளலாம், அத்துடன் தாங்கள் பொருத்தியுள்ள மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தித் தகட்டின் புகைப்படத்துடன், அதை பொருத்திய விவரங்களை மின்சார விநியோக நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும். இந்த தகவலை, கடிதம் / விண்ணப்பம் வாயிலாகவோ அல்லது பிரத்யேக இணையதளங்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம். இது பற்றிய தகவல் கிடைக்கப் பெற்ற 15 நாட்களுக்குள் மின்சார விநியோக நிறுவனம் நெட் மீட்டரிங் பொருத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மேற்கூரை தகடு பொருத்தப்பட்ட 30 நாட்களுக்குள் அதற்கான மானியத் தொகை வீட்டு உரிமையாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். 3 கிலோ வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட மேற்கூரை தகடுகளுக்கு 40 சதவீதமும், 10 கிலோ வாட் வரையிலான மின் உற்பத்தித் திறன் கொண்ட மேற்கூரை தகடுகளுக்கு 20 சதவீதமும் மத்திய அரசால் மானியமாக வழங்கப்படும். இப்படி வீடுகளுக்கு என அரசு ஒரு காலகட்டத்தை நிர்ணயம் செய்துள்ளது.
தற்பொழுது விவசாயிகளுக்கு மின் மோட்டார் பம்பு செட் வழங்கும் திட்டம், சூரிய மின் வேலி அமைக்கும் திட்டத்திற்கான மானியம் எவ்வளவு என்பது குறித்த விவரத்தை அரசு வெளியிட்டுள்ளது.
விவசாய நிலத்திற்கான விலையின் விவரம்:
