தங்க நகை வாங்குவதற்கு எத்தனை விளம்பரம் வருகிறதோ அதே போல நகையை விற்பதற்கான விளம்பரமும் அடகு வைப்பதற்கான விளம்பரமும் வருகிறது. அடகு நகைகளை மீட்டு வீட்டிற்கு கொண்டு வர நாம் சில எளிய பரிகாரங்களை செய்வது நல்லது. நம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு செய்யும் அந்த பரிகாரத்தின் மூலம் அடகு வைத்த நகைகளை எளிதில் மீட்கலாம்.
தற்போதுள்ள விலைவாசி உயர்வால் தங்கம் வாங்குவது என்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. அதனால் இருக்கின்ற நகைகளை பத்திரப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம். ஆனால் நமக்கு ஏற்பட்டிற்கும் கடன் பிரச்சனையால் நகையை அடகு வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். மேலும் அந்த தங்க நகைகளை மீட்க முடியாமலும் இருக்கிறோம். அவ்வாறு நீண்ட நாட்களாக மீட்க முடியாமல் வைத்திருக்கும் தங்க நகைகளைக் கூட, இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உடனே மீட்டுவிடலாம்.
இந்த பரிகாரத்தை நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். இதனை செய்யும் நாளில் தலைக்கு குளித்து உடலை சுத்தப்படுத்திக் கொண்டு பிறகு வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்துக் கொள்ளவும். கடவுள் படத்தை துடைத்து மஞ்சள் குங்குமத்தில் பொட்டு வைத்துக் கொள்ளவும்.பிறகு கடவுளுக்கு உகந்த மலர்களை கொண்டு மாலை சாற்றவும்.
ஒரு கிண்ணத்தில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு எடுத்து நிரப்பிக் கொண்டு.அதன் மேல் ஒரு அகல் விளக்கு வைத்து நல்லெண்ணெய் ஊற்றி அதில் தீபம் ஏற்றி மனதார வழிபடவும். இவ்வாறு வாரத்தில் ஒரு நாள் என்று ஒன்பது வாரம் அதே நாளில் செய்து வந்தால் உங்கள் நகைகளை எளிதில் மீட்டு விடலாம்.
Read more ; ஒற்றைத் தூணில் நிற்கும் பெரிய குகைக்கோயில்.. இந்த தூண் விழும்போது உலகம் அழிந்துவிடுமாம்..!!