தவெகவின் 2-ம் ஆண்டு தொடக்க விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராக #GetOut என வைக்கப்பட்ட பேனரில் தவெக தலைவர் விஜய் முதல் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரும் பேனரில் கையெழுத்திட்டனர். இதை தொடர்ந்து தவெக நிர்வாகிகள் அதில் கையெழுத்திட்டனர்.
இதையடுத்து சமீபத்தில் தவெக தேர்தல் வியூக பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார். அப்போது “பெரியாரை சமூக நீதியை முன்னிறுத்தி அரசியலை செய்ப்பவர்களை அகற்ற வேண்டும். மக்கள் உணர்வற்ற நிலையில் தான் தலைவர்கள் உள்ளனர். நீங்கள் 1000 கொடுத்துவிட்டு 10000 மக்களிடம் இருந்து பிடிக்கொண்டு இருக்கிறீர்கள். மேலை நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி ஊழல் நடக்கும் ஆனால் இவர்கள் கடனை வாங்கி ஊழல் செய்கின்றனர்.
அண்ணா எம்.ஜி.ஆர் போல் அடுத்த மாற்றம் விஜய். அதற்கான எல்லாம் பிளானும் ரெடி. பொருளாதாரத்தை தூக்கி எறிந்த ஒரே தலைவர் விஜய். அடுத்த 62வாரம் நாம் தான் எதிர்க்கட்சி. நம் தலைவர்தான் எதிர்கட்சித் தலைவர். பிரஷாந்த் கிசோர் ஏன் இங்கு வந்தார் என கேள்வி. கடந்த தேர்தலில் வரும் போதும் ஏன் கேட்கவில்லை. பிரசாந்த் கிஷோர் திமுகாவுக்கு வேலை செய்த போது ஏன் இந்த கேள்வி வரவில்லை. நம் கொள்கையை பார்த்து இன்னும் பல பூகம்பம் வர போகிறது. இன்னும் பல தலைவர்கள் வரவிருக்கிறார்கள் எனக் கூறினார்.
மேலும், விஜய் தலைமையில் அமைந்துள்ள தங்களின் கூட்டணி, ரொம்பவே தெளிவாக இருப்பதாக மேடையில் பேசியிருக்கிறார். போலி கபடதாரிகள் என இன்றைய ஆளும் கட்சியை சொன்ன ஆதவ் அர்ஜுனா, ஆளும் கட்சியின் கொள்கை தோல்விகள் குறித்தும் பேசினார். பிரசாந்த் கிஷோர் வந்தது திமுகவிற்கு பயம் என்று ஆதவ் அர்ஜுனா பேசினார். மேலும், “சிலர் சினிமாவிற்கு வந்து, அரசியலில் நுழைந்து, உடனே துணை முதல்வர் ஆகிவிடுவர்” என்ரு உதயநிதியையும் அட்டாக் செய்தார்.
Read more : சிறைக்கும் செல்வோம்.. கோட்டைக்கும் செல்வோம்.. 62 வாரங்களில் விஜய் தான்.. ஆதவ் அர்ஜூனா பேச்சு..