fbpx

’எப்படியாவது பணத்தை கொடுத்துடுறோம்’..!! கணவன் இல்லாத நேரத்தில் பெண்ணை பலாத்காரம் செய்த கந்துவட்டிக்காரர்..!!

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடை அடுத்த ஆம்பலாப்பட்டு தெற்கு, பரங்கிவெட்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் வினோத். கூலி தொழிலாளியான இவர், கடந்த 2 ஆண்டுக்கு முன்பு செந்தில்குமார் (48) என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கந்து வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். ஆனால், கடந்த 4 மாதங்களாக வட்டி பணத்தை வினோத் கொடுக்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், செந்தில்குமார் வினோத் வீட்டிற்கு வட்டிப்பணம் வசூலிக்க சென்றவர் வினோத் வீட்டில் இல்லாத நிலையில், அவரது மனைவி ஜூலியர் வளர்மதி (24) மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, தன்னிடம் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே உள்ளதாக வளர்மதி கூறியுள்ளார். மீதி பணத்தை கொஞ்ச நாளில் கொடுத்து விடுகிறேன் எனக் கூறி 5 ஆயிரம் ரூபாயை செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, பணத்தை பெற்றுக்கொண்ட செந்தில்குமார், வளர்மதியிடம் பாலியல் ரீதியாக நடந்துக்கொள்ள முயன்றுள்ளார். மேலும், வட்டி பணம் 5 ஆயிரம் ரூபாயில், 2,500 ரூபாயை செலவுக்கு வைத்துக்கொள் என வளர்மதியிடம் கொடுத்தாக கூறப்படுகிறது. ஆனால், செந்தில்குமார் கொடுத்த பணத்தை வாங்க மறுத்த வளர்மதி அழுதுக்கொண்டு இருந்தார். பிறகு, வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்த தனது கணவரிடம், நடந்த சம்பவம் குறித்து வளர்மதி கூறி அழுதுள்ளார்.

இது தொடர்பாக பாப்பாநாடு போலீசில் வினோத்தும், மனைவி வளர்மதியும் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக செந்தில்குமாரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துசென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சம்பவம் உறுதியானது. இதையடுத்து செந்தில்குமார் மீது கந்துவட்டி, பெண்ணை மானபங்கம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read More : நடிகை பார்வதி நாயர் மீது பாய்ந்தது வழக்கு..!! அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா..? கோர்ட் அதிரடி உத்தரவு..!!

English Summary

After receiving the money, Senthilkumar tried to sexually assault Varamathi.

Chella

Next Post

தீராத நோய், திருமணத்தடைக்கு காரணமே இதுதான்..!! புரட்டாசியில் இதை செய்தால் அனைத்து நீங்கும்..!!

Sat Sep 21 , 2024
In this post, you can see when Mahalaya Amavasi in Puratasi and its special features.

You May Like