fbpx

தந்தையின் உடலை 30 துண்டுகளாக வெட்டி போர்வெல் குழியில் போட்ட மகன்..!! குடிபோதையால் நேர்ந்த கொடூரம்..!!

குடிபோதையில் தகராறு செய்த தந்தையை சொந்த மகனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் பரசுராம குலாலி (54). இவர் மாண்டூர் பைபாஸ் அருகே தனது தோட்டத்தில் தங்கி வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் சண்டையிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பரசுராம குலாலி, அவரது சொந்த மகன் வித்தல குழலி (20) என்பவரை தகாத வார்த்தைகளில் பேசி அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும், குடிபோதையில் கொடூரமான முறையில் மகனை அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மகன், தனது தந்தையை அருகில் இருந்த கட்டையால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த பரசுராம துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தந்தையின் சடலத்தை மறைப்பதற்காக, அவரது தோட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் உடலை போடுவது என முடிவெடுத்து கொண்டுச் சென்றுள்ளார்.

தந்தையின் உடலை 30 துண்டுகளாக வெட்டி போர்வெல் குழியில் போட்ட மகன்..!! குடிபோதையால் நேர்ந்த கொடூரம்..!!

ஆனால், உடல் ஆழ்துளை கிணற்றில் இறங்காததால், கோடாரியைக் கொண்டுவந்து உடலை, 30க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் போட்டுள்ளார். பின்னர் எதுவும் நடக்காதது போல வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் துர்நாற்றம் வீசியுள்ளதை அறித்து காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடலை மீட்டனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தான் கொலை செய்ததை மகன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

Chella

Next Post

உலகின் மிக குளிரான நகரம் எங்கு உள்ளது தெரியுமா?

Tue Dec 13 , 2022
இந்திய மக்கள் காஷ்மீரில் தான் அதிக குளிரை கண்டிருப்பார்கள். ஆனால் தமிழகத்திலும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட குளிர் பிரதேசங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எப்போதும் அந்த பகுதிகளில் குளிர் காலமாகத்தான் இருக்கும். இந்திய மக்களைப் பொறுத்தவரையில் அதிக குளிர் என்றால் அது காஷ்மீரில் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காஷ்மீரை விட குளிரான பகுதி ஒன்று இருக்கிறது. ஆனால் என்ன ஒரு வித்தியாசம் என்றால் அது இந்தியாவில் கிடையாது. […]
கொரோனா

You May Like