மகன் முறை உறவுள்ள இளைஞரைக் காதலித்து வந்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு ஓடிச் சென்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பாலாஜி நகரைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவர், தனது கணவரை பிரிந்து 24 வயது மகள் தேவியுடன் வாழ்ந்து வருகிறார். இவரது மகள் தேவி, நர்ஸிங் படிப்பை முடித்து விட்டு, வீடுகளில் நோய்வாய்ப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வீட்டிலேயே தங்கியிருந்து மருத்துவம் பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து தேவி திடீரென மாயமாகியுள்ளார்.
தனது மகள் காணாமல் போனது குறித்து தாய் முனியம்மாள், செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். மேலும், அதே பகுதியில் சாய்ராம் என்ற 19 வயது இளைஞனும் காணாமல் போனது குறித்து புகார் வந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, காணாமல் போன இருவரும் உறவினர்கள் என தெரியவந்தது.
19 வயது இளைஞரான சாய்ராமுக்கும் தேவிக்கும் சித்தி முறை வருவதாகவும் இருவரும் கடந்த 3 மாதங்களாக காதலித்து வந்ததும் தெரியவந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை பெசன்ட் நகரில் உள்ள முருகன் கோவில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, இருவரும் வழக்கறிஞர்கள் மூலம் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில், தேவி அடுத்தடுத்து இப்படி சுமார் 12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் பறித்தது தெரிய வந்தது. ஒரு கட்டத்தில் தேவி தனது தாயாருடன் செல்ல சம்மதித்த நிலையில், இவை எல்லாம் தெரிந்தும் கூட மகன் உறவு முறையான 19 வயது காதலன் சினிமா படங்களில் வருவது போல் தன் தாயின் தோளில் சாய்ந்து கொண்டு காதலியை பார்த்து தேம்பி அழுதார்.
இருவரது தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர் அவரது பெற்றோர் வீட்டிற்கு காவல்துறையினர் அனுப்பிவைப்பதற்க்குள் படாத பாடுபட்டனர். திருமணம் என்ற பெயரில் இந்தப் பெண் கட்டியிருந்த தாலியை உறவினர்களுக்கு மத்தியில் மகனின் உறவினரிடம் அந்த பெண் கழட்டி கொடுத்துவிட்டு, வீடு திரும்பினர்.
Read More : இவ்வளவு மலிவு விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரா..? இத்தனை வசதிகள் இருக்கா..? பேட்டரி தான் ஹைலெட்..!!