fbpx

தண்டவாளங்களில் தெற்கு ரயில்வே ஆய்வு… பயண நேரத்தை குறைக்க முயற்சி …

தெற்கு ரயில்வே அதிகாரிகள் வழித்தடங்களில் தண்டவாளம் உறுதியாக உள்ளதா என்பது உள்பட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.

ரயில்களின்வேகத்தை அதிகரிப்பதால் பயணிகளுக்கு பயண நேரம் குறையும். எனவே தெற்கு ரயில்வே அதிகாரிகள் தண்டவாளங்கள் எவ்வளவு உறுதித் தன்மையோடு உள்ளது என்பது குறித்து ஆராய்ச்சி நடத்தியது.  

சிக்னல் முறையை மேம்படுத்துதல் , வேகக் கட்டுப்பாடுகளை நீக்குதல் , பாலங்களை சீர் செய்தல் போன்ற சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நப்பு நிதியாண்டில் 11 வழித்தடங்களில் 145 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க தண்டவாளத்தின் உறுதித்தன்மை குறித்து சோதனை நடத்தப்பட்டது. தரப் பரிசோதனைகளும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இதன் அடுத்தகட்டமாக ரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் ரயில்கள் வேகமாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில்வேயில் சில நேரங்களில் ரயில்கள் தாமதமாக வருகின்றன. சில நேரங்களில் ரயில்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் இலக்கை சென்றடைவதில்லை. சமீப காலங்களில் ரயில் தண்டவாளங்களில் ஆங்காங்கே உள்ள பிரச்சனையால் ரயில்களை மெதுவாக இயக்க வேண்டி உள்ளது. இவற்றை எல்லாம் மாற்றி ரயில்களை வேகமாக இயக்க என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது உள்பட பயணிகளின் குறைகளை களையவும் தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

’அலெக்சா’ காப்பாற்றிய 6 உயிர்கள் …

Wed Sep 21 , 2022
அமெரிக்காவில் தீ விபத்து குறித்து உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுத்து 6 பேரின் உயிரை அலெக்சா கருவி காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் வசித்து வந்தனர். நள்ளிரவில் வீட்டில் இருந்த அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். 2 மணி அளவில் வீட்டில் திடீரென தீப்பிடித்துள்ளது. குடும்ப உறுப்பினர்கள் யாரும் கவனிக்கவில்லை என கூறப்படுகின்றது. வீட்டை சூழ்ந்து […]

You May Like