ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை, மத்திய அரசு ஓய்வூதியர் சங்கங்கள், அதனுடன் இணைந்த சங்கங்களுடன் சேர்ந்து, தூய்மையை ஊக்குவித்தல், பொதுமக்களின் குறைகளுக்குத் தீர்வுகாணுதல், டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவித்தல், நல்லாட்சி முயற்சிகள் மூலம் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக சிறப்பு இயக்கம் 3.0-ன் ஒரு பகுதியாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட சிறப்பு இயக்கத்திற்கான முன்கூட்டிய ஆயத்தங்கள், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறையில் காலவரையறைக்குட்பட்ட முறையில் ஆர்வத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு இயக்கம் 3.0-ன் போது ஆய்வு செய்வதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோப்புகளைத் துறை அடையாளம் கண்டுள்ளது. இதுவரை, பதிவுகளின் ஆய்வுக்குப் பிறகு, சுமார் நூறு பழைய பதிவுகள் / கோப்புகளை அகற்றுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் பதிவு தக்கவைப்பு அட்டவணையின் அடிப்படையில் சுமார் 900 மின்னணுக் கோப்புகள் ஆய்வுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. மின்னணு மனித வள மேலாண்மை முறை 2.0 ஒருங்கிணைந்த சேவைகளை மேம்படுத்துவதற்கும், முக்கிய டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்கும் ஒரு கருவியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. சிறப்பு இயக்கம் 3.0 அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை தொடரத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.