fbpx

வாரத்தில் 6 நாட்கள்…! காலை 9 முதல் மாலை 5 மணி வரை தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி…!

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறையின் கீழ் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற குழந்தைகள் , மாற்றுத் திறனாளி குழந்தைகள் உட்பட இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் பள்ளிக்கு வருகைபுரியாத மாணவர்கள் கல்வியை பாதியில் கைவிடும் மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளையும், சிறப்பு பயிற்சிகளையும் வழங்கி, அவர்களை படிப்பைத் தொடர செய்வது அவசியம். இதை கருத்தில்கொண்டு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் ‘தொடர்ந்து கற்போம்’ என்ற முன்னோடித் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 2023-2024-ம் கல்வி ஆண்டில், அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம், பள்ளி அளவில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு, அந்தந்த உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு, ஜுன் 1 முதல் 30 வரை 30 நாட்களுக்கு, திங்கள் முதல் சனி வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில், குறைந்தபட்சக் கையேடுகளைப் பயன்படுத்தி, வாராந்திர தேர்வுகளைநடத்த வேண்டும். சனிக்கிழமை தோறும் ஊக்கமூட்டுதல் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சி அளிக்க வேண்டும். எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் தேர்வுக்கு வருகைபுரியாத மாணவர்கள் அனைவரையும், துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பயணிகள் கவனத்திற்கு..! ரயில் விபத்து எதிரொலி... 18 தொலை தூர ரயில்கள் ரத்து...!

Sat Jun 3 , 2023
கோரமண்டல்‌ விரைவு ரயில் விபத்துக்குள்ளானதை அடுத்து 18 தொலைதூர ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று மாலை நடந்த பயங்கரமான மூன்று ரயில் விபத்தைத் தொடர்ந்து 18 தொலை தூர ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஏழு ரயில்கள் டாடாநகர் நிலையம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. அதன் படி, 12837 ஹவுரா-பூரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், 12863 ஹவுரா-பெங்களூரு சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் 12839 […]

You May Like