fbpx

கெட்ட நேரத்தை மாற்றும் அதிசய திருக்கோயில்.! எங்கு அமைந்துள்ளது தெரியுமா.?!

பொதுவாக நம் வாழ்வில் நடக்கும் பல கெட்ட விஷயங்களிற்கும் நேரம் சரியில்லை, நல்ல நேரம் வரும்போது சரியாகிவிடும் என்று பெரியவர்கள் கூறுவதை கேட்டிருப்போம். அப்படியிருக்க இந்த திருக்கோயிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்தால் கெட்ட நேரத்தையும், நல்ல நேரமாக மாற்றிவிடும் சக்தி படைத்தது என்று கூறி வருகின்றனர். இந்த கோயில் எங்கு அமைந்துள்ளது என்பதை குறித்து பார்க்கலாம்?

மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் வழியில் சிலார்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. அங்குதான் ஸ்ரீ காலதேவி கோயில் உள்ளது. இங்கு சாதாரண நாட்களை விட பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் மட்டுமே பிரசித்தி பெற்றுள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். கோயிலின் கோபுரத்திலேயே ‘நேரமே உலகம்’ என்று எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள், நட்சத்திரங்கள் போன்ற பலவற்றையும் இயக்கும் சக்தியை படைத்த காலதேவி கோயிலுக்கு சென்று தரிசித்து வந்தால் கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்ற முடியும் என்பது இந்த கோயிலின் அளிக்க முடியாத நம்பிக்கையாகும். இந்த கோயிலுக்கு சென்று தரிசித்து வந்த பலரது வாழ்விலும் நன்மைகள் நடந்துள்ளது என்று கூறி வருகின்றனர்.

காலதேவி கோயிலின் முக்கிய சிறப்பாக கூறப்படுவது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மட்டுமே நடை திறக்கப்படும், சூரிய உதயத்திற்கு முன்பாக நடை சாத்தப்படும் என்பது ஆகும். பௌர்ணமி மட்டுமல்லாது அமாவாசை நாட்களிலும் விசேஷமான நாளாகவே இருந்து வருகிறது. கால தேவிக்கு உகந்த நாள் அமாவாசை தான் என்று அக்கோயிலின் பூசாரிகள் கூறி வருகின்றனர்.

Rupa

Next Post

ரயில்வேயில் ஐடிஐ டிப்ளமோ பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.! ₹.19,900/- சம்பளத்தில் சூப்பரான வேலை.! உடனே அப்ளை பண்ணுங்க.!

Thu Jan 18 , 2024
இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை இந்திய ரயில்வே துறை அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பின்படி மத்திய ரயில்வேயில் அசிஸ்டன்ட் லோகோ பைலட் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி காலியாக உள்ள 5696 பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்திருக்கிறது. அசிஸ்டன்ட் லோகோ பைலட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் மெட்ரிகுலேஷன் அல்லது எஸ்.எஸ்.எல்.சி-யில் தேர்ச்சி […]

You May Like