fbpx

பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை – ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்பு..!

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆங்காங்கே உள்ள ஈத்கா மைதானம் மற்றும் மசூதிகள், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.

தருமபுரி நகர அனைத்து மசூதிகள் கூட்டமைப்பின் சார்பில் கிருஷ்ணகிரி ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நேற்று காலை நடைபெற்றது. இதில் தர்மபுரி நகரில் உள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இதேபோன்று பாலக்கோட்டில் உள்ள மசூதிகளில் பக்ரீத் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்புத் தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடையுடன் கலந்து கொண்டனர். இதேபோன்று பென்னாகரம் மற்றும் அரூரில் உள்ள மசூதிகளிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.இந்த தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். பின்னர் ஏழைகளுக்கு குர்பானி கொடுத்தனர். இந்த சிறப்பு தொழுகையை தொடர்ந்து முஸ்லிம்கள் ஏழைகளுக்கு ஆட்டு இறைச்சி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினர்.

Maha

Next Post

கள்ளக்காதலனுக்கு பிறந்த குழந்தையை வாழை மரத்தடியில் புதைத்த இளம்பெண்..? திண்டுக்கல்லில் திடுக்கிடும் சம்பவம்..!!

Thu Jun 29 , 2023
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 32 வயது இளம்பெண், கணவரை பிரிந்து தனது 11 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாக, அந்த இளம்பெண் கர்ப்பம் ஆனார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு குழந்தை […]
கள்ளக்காதலனுக்கு பிறந்த குழந்தையை வாழை மரத்தடியில் புதைத்த இளம்பெண்..? திண்டுக்கல்லில் திடுக்கிடும் சம்பவம்..!!

You May Like