fbpx

கன்னியாகுமரி: கோர விபத்தில் பலியான காவல் துறை உதவி ஆய்வாளர்.! முதலமைச்சர் இரங்கல்.!

கன்னியாகுமரி அருகே சாலை விபத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே இந்த துயர சம்பவம் நடைபெற்று உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சிறப்பு உதவிய ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஜஸ்டின்(53). இவர் இன்று மாலை பணி நிமித்தமாக நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவழியாக சென்ற லாரி இவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜஸ்டின் பலியானார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறை உதவி ஆய்வாளர் ஜஸ்டினின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு பணியில் இருக்கும் போது மரணம் அடைந்த காவல்துறை அதிகாரிக்கு 25 லட்ச ரூபாய் நிவாரணமும் வழங்கியிருக்கிறார் .

Next Post

ஆந்திரா: செல்ஃபி எடுக்க முயன்ற நபரை கடித்து குதறிய சிங்கம்.! வன உயிரியல் பூங்காவில் நடந்த துயர சம்பவம்.!

Thu Feb 15 , 2024
‌ ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள வனவிலங்கியல் பூங்காவில் சிங்கத்தின் அருகே சென்று செல்ஃபி எடுக்க முயன்ற நபர் சிங்கத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்று உள்ளது. இறந்த நபர் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள பன்சூர் நகராட்சியில் வசிக்கும் 34 வயதான பிரஹலாத் குஜ்ஜார் என […]

You May Like