fbpx

சென்னை – ஒரிசா சிறப்பு ரயில்கள்….! முழு விவரம் இதோ…..!

ஒரிசா மாநிலம் பாலாசோர் அருகே சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் உட்பட 3 ரயில்கள் ஒன்றுடன், ஒன்று மோதி விபத்தில் சிக்கியது. விபத்து நடைபெற்ற பகுதிகளில் உயிர் தப்பிய 250 தமிழர்களுடன் சிறப்பு ரயில் சென்னை நோக்கி கிளம்பி உள்ளது. இந்த ரயில் இன்று மாலை சென்னைக்கு வந்தடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிசா மாநிலம் பாலாசூர் அருகே சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் உட்பட 3 ரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்தில் சிக்கியது. இதில் 288 பேர் பலியாகினர் 900 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது காயமடைந்தவர்கள் ஒரிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கின்ற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ரயில் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த தமிழக பயணிகளை சென்னை அழைத்து வருவதற்கு புவனேஸ்வரத்தில் இருந்து சிறப்பு ரயில் புறப்பட்டது. இதில் 250 தமிழர்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.

பெங்களூரு ஹவுரா அதிவிரைவு ரயில், சாலிமர், சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஒன்று என மொத்தம் மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கின. அதேசமயம் ஒரிசாவில் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உறவினர்களுக்கு உதவி புரியும் வகையில், சென்னையிலிருந்து செல்வதற்காக இன்று மாலை 7:20 மணி அளவில் சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில் புறப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ரயிலின் பயணம் செய்ய உறவினர்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள். இதில் பயணம் செய்வதற்கு கட்டணம் எதுவும் தேவையில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரலில் பயணிகளுக்கு உதவி புரியவும், நிலைமையை கட்டுக்குள் வைப்பதற்கும் 200 காவலர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

Next Post

ஒடிசா ரயில் விபத்து தமிழர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் குழு விரைந்துள்ளது…..! 100க்கும் மேற்பட்டவர்களுடன் பேசியுள்ளோம் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்…..!

Sat Jun 3 , 2023
ஒரிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தை முன்னிட்டு சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது உரையாற்றிய அவர், ரயில் விபத்து குறித்து முழுமையான விவரங்கள் இன்று மாலைக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என கூறினார். மேலும் 2 அமைச்சர்கள் கொண்ட குழுவும் ஒடிசா சென்றுள்ளது. அதேபோல 2 மாவட்ட வருவாய் அலுவலர்கள், 2 துணை ஆட்சியர்கள், 4 தாசில்தார்கள் கொண்ட […]

You May Like