fbpx

இன்பச் செய்தி..! பள்ளி மாணவர்களுக்கு ரூ.5,000 பரிசுத்தொகை…! வரும் 12-ம் போட்டி நடைபெறும்…! மாவட்ட ஆட்சியர் தகவல்…

சேலம்‌ மாவட்டத்தில்‌ அண்ணல்‌ காந்தியடிகள்‌ பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப்போட்டிகள்‌ நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்‌ வளர்ச்சித்‌ துறையின்‌ 2021- 22ஆம்‌ ஆண்டிற்கான மானியக்‌ கோரிக்கையில்‌ நாட்டிற்காகப்‌ பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்‌ நேரு, அண்ணல்‌ அம்பேத்கர்‌, தந்தை பெரியார்‌, பேரறிஞர்‌ அண்ணா, முத்தமிழ்‌ அறிஞர்‌ கலைஞர்‌ ஆகியோரின்‌ஸபிறந்த நாளன்று மாவட்ட அளவில்‌ கல்லூரி மற்றும்‌ பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்‌ போட்டிஸநடத்தி பரிசு, பாராட்டுச்‌ சான்றிதழ்‌ வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அவ்வறிப்பிற்கிணங்க 2022-2023-ம்‌ ஆண்டில்‌ சேலம்‌ மாவட்டத்தில்‌ அக்டோபர்‌ 12 அன்று அண்ணல்‌ காந்தியடிகள்‌ பிறந்தநாள்‌ பேச்சுப்போட்டி கல்லூரி மற்றும்‌ பள்ளிஸமாணவர்களுக்கு சேலம்‌ அரசு கலைக்‌ கல்லூரியில்‌ (இருபாலர்‌) முற்பகல்‌ 09.00 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.

பள்ளிகளில்‌ நடைபெறும்‌ அண்ணல்‌ காந்தியடிகள்‌ பிறந்தநாள்‌ பேச்சுப்‌ போட்டியானது அண்ணலின்‌ அடிச்சுவட்டில்‌, காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில்‌ ஒற்றுமை, பாரததேசமென்று பெயர்‌ சொல்லுவோம்‌ என்ற தலைப்புகளிலும்‌, கல்லூரிகளில்‌ நடைபெறும்‌ பேச்சுப்‌ போட்டியானது வாழ்விக்க வந்த எம்மான்‌, மனித வாழ்க்கையும்‌, காந்தியடிகளும்‌ சத்திய சோதனை, எம்மதமும்‌ நம்மதம்‌, காந்தியடிகளின்‌ வாழ்க்கையிலே இமயம்‌ முதல்‌ குமாரிவரை என்ற தலைப்புகளிலும்‌ நடைபெறவுள்ளது.

கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்‌ போட்டியில்‌ பங்குபெற்று வெற்றி பெறும்‌ மாணவர்களுக்கு மாவட்ட அளவில்‌ முதல்‌ பரிசாக ரூ.5,000/, இரண்டாம்‌ பரிசாக ரூ.3,000 மூன்றாம்‌ பரிசாக ரூ.2,000, மற்றும்‌ பாராட்டுச்‌ சான்றிதழும்‌ மேலும்‌ அரசுப்‌ பள்ளி மாணவர்கள்‌ இருவருக்கு சிறப்புப்‌ பரிசாக தலா ரூ.2,000/-மற்றும்‌ பாராட்டுச்‌ சான்றிதழும்‌ வழங்கப்பெறும்‌. னவே சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள பள்ளி, கல்லூரிகளில்‌ பயிலும்‌ மாணவர்கள்‌ ஒருபள்ளிக்கு, ஒரு கல்லூரிக்கு 2 பேர்‌ வீதம்‌ போட்டியில்‌ கலந்துக்கொள்ள பள்ளித்‌தலைமையாசிரியர்‌, கல்லூரி முதல்வரின்‌ பரிந்துரைக்‌ கடிதத்துடன்‌ 12.10.2022 அன்று சேலம்‌ஸஅரசு கலைக்‌ கல்லூரியில்‌ (இருபாலர்‌) முற்பகல்‌ 08.30 மணிக்கு தங்கள்‌ வருகையைப்‌ பதிவுசெய்து முறையாக போட்டியில்‌ கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

சற்றுமுன்... சரஸ்வதி பூஜை முன்னிட்டு 3-ம் தேதி முதல் ஒரு வாரம் விடுமுறை...! நீதிமன்ற பதிவாளர் உத்தரவு...!

Fri Sep 30 , 2022
சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி பண்டிகையை முன்னிட்டு நீதிமன்றங்களுக்கு விடுமுறை வழங்கி பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுதபூஜை, இந்த ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தசரா எனப்படும் இந்த பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுத பூஜை அக்டோபர் 4 ஆம் தேதியும் ( செவ்வாய்க்கிழமை), சரஸ்வதி பூஜை அக்டோபர் 5- ம் தேதியும் நாடு முழுவதும் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாட […]

You May Like