ஐபிஎல் இறுதிப்போட்டியின்போது மைதானத்தில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற பஞ்சு, ஹேர் ட்ரையர் போன்றவற்றை பயன்படுத்திய பிசிசிஐயை கலாய்த்து ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஐபிஎல் 2023 16வது சீசனின் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி சென்னை அணி வெற்றிபெற்று 5வது முறையாக சாம்பியன் மகுடம் சூடியது. முன்னதாக முதல் இன்னிங்ஸில் குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. இதைதொடர்ந்து சென்னை அணி 3 மூன்று பந்துகளில் 4 ரன்களை அடிக்க, மழை பெய்து ஆட்டத்தை தாமதப்படுத்தியது. மழை நின்ற பிறகு மைதானத்தில் அதிக தண்ணீர் ஆக இருந்ததால் ஆட்டம் தொடங்குவதற்கு மீண்டும் தாமதமானது.
மழை நின்ற பிறகு மைதானத்தில் மழை நீர் தேங்கி இருந்ததால் ஆட்டம் தொடங்குவதற்கு மீண்டும் தாமதமானது. மழைபெய்து வந்த மைதானத்தின் ஈரத்தை உலர்த்துவதற்கு களப்பணியாளர்கள் கடுமையாக போராடி வந்தனர். அவர்கள் மைதானத்தை சரி செய்வதற்கு பஞ்சு மற்றும் அயன்பாக்ஸ் போன்றவற்றை பயன்படுத்தி உலர்த்திவந்தனர். இது தற்பொழுது ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், அதில் ஒருவர், ஐபிஎல் 2023 லீக்கிற்கான பட்ஜெட் ரூ.87 கோடி, இந்த மைதானத்தை உலர்த்த 80 ரூபாய் ஹேர் ட்ரையர் என்றும், மற்றொருவர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை பிசிசிஐயுடன் ஒப்பிட்டு இசிபி-ஐ விட பிசிசிஐ 728% பணக்காரர் என்பதை நினைவில் கொள்ளவும் என்றும் பதிவிட்டுள்ளனர். மேலும், ஒருவர் அவுட்ஃபீல்ட் ஈரமாக உள்ளது, ஹேர் ட்ரையரைப் பயன்படுத்த வேண்டிய நேரம் இது என்று கேலி செய்துள்ளார்.