fbpx

பாலியல் புகாரில் சிக்கிய Squid Game நடிகர்..!! 79 வயதில் சிறை தண்டனை விதிப்பு..!!

பிரபல Squid Game தொடரில் நடித்த ஓ யங் சூவுக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதற்காக ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல கோடி பேர்களால் பார்க்கப்பட்ட கொரியன் வெப் சிரீஸ் Squid Game. நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான இத்தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தென் கொரியாவைச் சேர்ந்த நடிகர் ஓ யங் சூ . 79 வயதான இவர் தென் கொரிய நடிகர்களில் முதல் முதலாக சிறந்த துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருதைப் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக இவர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவர் மீதான குற்றச்சாட்டு தவறு என்று அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால், சம்பந்தப்பட்ட பெண் மீண்டும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் ஓ யங் சூ “எனது கடைசி காலத்தில் இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமப்பது கடினமாக இருக்கிறது ” எனத் தெரிவித்திருக்கிறார்.

Chella

Next Post

கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கு: 3 தோட்டாக்களுடன் இந்து சேனா தலைவருக்கு கொலை மிரட்டல்.!

Sat Feb 3 , 2024
கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கில் இருந்து விலகுமாறு இந்து சேனா அமைப்பின் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் கொலை மிரட்டல் கடிதம் குறித்து காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்து சேனா அமைப்பின் தலைவராக இருப்பவர் விக்ரம் குப்தா. இவர் கிருஷ்ணஜன்ம பூமி வழக்கு தொடர்பாக தீவிரமாக போராடி வருகிறார். இந்நிலையில் அந்த வழக்கிலிருந்து […]

You May Like