fbpx

Breaking: தமிழக மீனவர்கள் 17 பேரை கைது செய்த இலங்கை கடற்படை…!

தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ராமேஸ்வரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுவதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் தமிழக மீனவர்கள் 17 பேரை எல்லை கடந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 17 மீனவர்களுடன் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது. கைது செய்யப்பட்ட 17 மீனவர்களையும் காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலால் தமிழக மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.

டிசம்பர் 5-ம் தேதி இதே நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 14 ராமேஸ்வர மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் 2 விசைப்படகுகளுடன் சிறை பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

Sri Lankan Navy arrests 17 Tamil Nadu fishermen.

Vignesh

Next Post

கோர தாண்டவமாடிய சிடோ சூறாவளி!. பலி எண்ணிக்கை 120 ஆக உயர்வு!. 800க்கும் மேற்பட்டோர் காயம்!. மொசாம்பிக்கில் பயங்கரம்!

Tue Dec 24 , 2024
Cyclone Chido: மொசாம்பிக்கில் கோர தாண்டவமாடிய சிடோ சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120ஆக உயர்ந்துள்ளது. 34 பேர் பலியாகி உள்ளனர். 868 பேர் காயமடைந்து உள்ளனர். மொசாம்பிக் நாட்டின் பல பகுதிகளை சிடோ என பெயரிடப்பட்ட சூறாவளி கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட 3 மாகாணங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சூறாவளியால் மணிக்கு 160 மைல்கள் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதுவரை […]

You May Like