fbpx

தொடர் அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படை!. ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு!

fishermen: எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. கைதாகும் தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிப்பது, அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, படகுகளை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது போன்ற செயல்களில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனை தடுக்கக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அந்த வகையில், தற்போது மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை 11 மீனவர்களை கைது செய்தது. மேலும், மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தது. நடுக்கடலில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மட்டுமின்றி தமிழக மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Readmore: அதிர்ச்சி!. நடிகை ஐஸ்வர்யா ராய் கார் மீது மோதிய பேருந்து!. ஓட்டுநரை அறைந்த பாதுகாவலர்!. என்ன நடந்தது?

English Summary

Sri Lankan Navy continues to commit atrocities! 11 Rameswaram fishermen arrested!

Kokila

Next Post

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை..!! மாத சம்பளம் ரூ.60,000..!! விண்ணப்பிக்க இறுதி நாள் நெருங்கிருச்சு..!!

Thu Mar 27 , 2025
An employment notification has been issued to fill vacant posts at Anna University, Chennai.

You May Like