பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவரது தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு நாடாளுமன்றத்தில் வெறும் 3 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். இதனால் எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றுவது கடினம் என்பதால் அதிபராக பதவியேற்ற மறுநாளே நாடாளுமன்றத்தை கலைத்து திசாநாயக்க உத்தரவிட்டார்.
புதிய நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவுகிறது. 21 கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து அதிபரின் தேசிய மக்கள் சக்தி களமிறங்குகிறது. ராஜபக்சேக்களின் இலங்கை பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, புதிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.