எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட நாகை மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக இலங்கை படையினர் கைது செய்வதும் , அவர்கள்மீது தாக்குதல்நடத்துவதும் தொடர்கதையாகி வருகின்றது. அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதோடு மட்டுமின்றி அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கின்றது. அந்த வகையில் கடந்த 22ம் தேதி கோடியக்கரைக்கு தென்கிழக்கே முல்லைத்தீவு பகுதியில் நாகையைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்து வந்தார்கள். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி காமராஜ் , செல்லையன் , அன்பரசன் , பூவரசன், பாலு , முருகானந்தம் , ஸ்டீபன் ., முருபன், உள்ளிட்ட 10 மீனவர்களை கைது செய்தனர். அத்துடன் அவர்களின் விசைப் படகை பறிமுதல் செய்து திரிகோணமலை பகுதியில் நிறுத்தினர்.
இந்த வழக்கு இலங்கை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது . விசாரணை நடத்திய நீதிபதி 10 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். அவர்கள் அனைவரும் ஓரிரு நாட்களில் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் .