fbpx

செம வாய்ப்பு…!அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு…! 20-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்…!

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மத்திய அரசில்‌ 7,500 பணிக்காலியிடங்களுக்கு ஒருங்கிணைந்த பட்டதாரி பணிக்கு உதவி தணிக்கை அலுவலர்‌, உதவி பிரிவு அலுவலர்‌, வருமானவரித்துறை ஆய்வாளர்‌, உதவியாளர்‌ மற்றும்‌ அஞ்சலக துறையில்‌ உதவியாளர்‌ போன்ற பல பணிக்காலியிடங்களுக்கு பணியிடத்திற்கு மத்திய அரசுப்பணி தேர்வாணையம்‌ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இப்பணிக்கு கல்வித்தகுதி பட்ட படிப்பு முடித்து இருக்க வேண்டும், வயது வரம்பு 01.08.2023 தேதியில்‌ 18 முதல்‌ 27 ஆகும்‌.வயது வரம்பில்‌ தாழ்த்தப்பட்ட மற்றும்‌ பழங்குடியினவருக்கு 5 வருடங்கள்‌ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 வருடங்கள்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள்‌ வயது வரம்பில்‌ தளர்வு உண்டு ஆன்லைனில்‌ விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2023 ஆகும்‌.

மேலும்‌ விவரங்கள்‌ அறிந்துகொள்ளவும்‌ விண்ணப்பிக்கவும்‌ sss.in.in என்ற இணைதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம்‌. காஞ்சிபுரம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டம்‌ வழியாக மேற்காணும்‌ போட்டித்தேர்விற்கு ‘இலவச பயிற்சி வகுப்புகள்‌ 20.04.2023 அன்று நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும்‌ ‘இப்போட்டித்தேர்விற்கு தகுதியும்‌ விருப்பமும்‌ உள்ள விண்ணப்பத்தாரர்கள்‌ இலவச பயிற்சி வகுப்பில்‌ கலந்துகொண்டு பயன்பெறலாம்‌. இப்பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொள்ள விருப்பம்‌ உள்ளவர்கள்‌ தங்களது புகைப்படம்‌, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல்‌, போட்டி தேர்வுக்கு. விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும்‌ ஆதார்‌ அட்டை ஆகிய விவரங்களுடன்‌.

காஞ்சிபுரம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தினை நேரில்‌ தொடர்புக்‌ கொண்டு முண்பதிவு செய்து கொள்ள வேண்டும்‌. மேலும்‌:044-27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உச்சநீதிமன்றம் அதிரடி...!இந்தியாவில் ஓரின சேர்க்கை திருமணம்... வரும் 18-ம் முதல் தொடர் விசாரணை...!

Sun Apr 16 , 2023
ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுவை ஏப்ரல் 18-ம் தேதி முதல் உச்ச நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்க உள்ளது. ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுக்கள் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்மா, பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கில் மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில், ஒரே பாலின திருமணத்தை நாட்டின் நெறிமுறை […]

You May Like