பன்னோக்கு பணியாளர் மற்றும் ஹவல்தார் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
MTS எனப்படும் பன்னோக்கு தொழில்நுட்பம் சாராத பணியாளர் மற்றும் ஹவல்தார் (சிபிஐசி & சிபிஎன்) தேர்வு-2022 (நிலை-1)-ஐ மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கணினி வழியில் நடத்தவுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான ssc.nic.in-யில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 17.02.2023 ஆகும்.
தேர்வுக்கான கட்டணத்தை பிப்ரவரி 19-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புகைப்படம் மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டும். புகைப்படத்தில் தொப்பி, மூக்குகண்ணாடி அணிந்திருக்கக் கூடாது, தெளிவாக இருக்க வேண்டும்.இந்த தகவலை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் துணை இயக்குனர் கந்தன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.