fbpx

SSC தேர்வுக்கு வரும் ஜனவரி 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..‌.! வெளியான முக்கிய அறிவிப்பு…!

மத்திய அரசின் தென்மண்டல பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான தேர்வு 2022 (நிலை-1) கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது. மத்திய அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்ற பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்களில் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர், டிஇபி போன்ற பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்களின் வயது, கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு அட்டவணை எவ்விதம் விண்ணப்பிக்க வேண்டும் போன்ற தகவல்கள் இந்த தேர்வாணையத்தின் அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ssc.nic.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 04.01.2023. ஆன்லைன் விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் அனுப்பும் புகைப்படத்தில் தொப்பியோ, கண்ணாடியே அணிந்திருக்கக்கூடாது. அவர்கள் புகைப்படம் தெளிவாக இருக்க வேண்டும்.

தென்னக பகுதிகளில் கணினி மூலம் நடைபெறும் இந்த தேர்வு 22 மையங்களில் பிப்ரவரி – மார்ச் 2023-ல் நடைபெறுகிறது. ஆந்திரா மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 8 மையத்திலும், தெலங்கானாவில் 3 மையங்களிலும் நடைபெறவுள்ளது.

Vignesh

Next Post

கட்டிலுக்கு அடியில் தாயின் உடல்..!! துர்நாற்றம் வீசும்போதெல்லாம் ஊதுவத்தி கொளுத்திய மகன்..!!

Wed Dec 14 , 2022
இறந்த தாயின் உடலை கட்டிலுக்கு அடியில் வைத்துவிட்டு, 4 நாட்களாக சடலத்துடன் இருந்த மகனை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே ஷிவ்பூர் ஷாபாஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த சாந்தி தேவி (82) என்ற மூதாட்டி ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் நிகில் (45) மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. நிகிலின் இரு பிள்ளைகளும் டெல்லியில் படித்து வருகின்றனர். நிகில் மட்டுமே நோயுற்ற தாயுடன் வசித்து […]
தகன மேடையில் எரிந்த பெண்ணின் சடலம்..!! இறைச்சியை பங்கு போட்டு சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

You May Like