fbpx

வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரருக்கு 6 வருட தடை..! ஐசிசி அதிரடி உத்தரவு.!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் ஆறு ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்ற டி10 போட்டிகளின் போது ஐசிசி விதிமுறைகளை மீறியதாக அவர் மீது எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த நடவடிக்கைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்திருக்கிறது.

19 வயதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 2000 ஆண்டில் டெஸ்ட் மட்டும் ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமானார் மார்லன் சாமுவேல். 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். அந்த இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் அபுதாபியில் நடைபெற்ற டி10 கிரிக்கெட் போட்டியின் போது ஐசிசி விதிமுறைகளை மீறியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. மேலும் இதற்கு முன்பு ஊழல் சம்பந்தப்பட்ட அமர்வுகளின் போது 750 டாலர்களுக்கு மேல் பணம் மற்றும் பரிசுத்தொகை கிடைத்தால் அது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன்டி கரப்ஷன் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த விதிமுறைகளை அவர் மீது இருக்கிறார்.

இதன் காரணமாக அவருக்கு ஆறு வருடங்கள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இந்த ஆறு வருடங்களுக்கு பயிற்சியாளர் மற்றும் வர்ணனையாளர் போன்ற எந்த பணிகளிலும் ஈடுபடவும் முடியாது. அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடும் போது இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் தண்டனை வழங்கப்பட்டு இருப்பதாக ஐசிசி தெரிவித்திருக்கிறது. எமிரேட்ஸ் கிரிக்கெட் கவுன்சில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த ஆறு வருடத்தடை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Next Post

'நான் யாரையாவது கற்பழித்து விட்டேனா என்ன’..? ’நான் தலைமறைவாகவில்லை’..!! ஆடியோ வெளியிட்ட மன்சூர்..!!

Thu Nov 23 , 2023
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று அவர் ஆஜராகவில்லை. இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைமை இயக்குநருக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்த நிலையில், அவர் மீது இரு பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராக சம்மன் […]

You May Like