fbpx

”இன்று இரவு முதல் மீண்டும் ஆரம்பம்”..!! டெல்டா மாவட்டங்களில் கனமழை பொளந்து கட்டப் போகுது..!!

தமிழ்நாட்டில் மழை நிலவரம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ”தென் சென்னை மக்கள் எதிர்பார்த்தது போலவே காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. மீண்டும் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை பெய்யும். பூண்டி, செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்யும். தற்போதைக்கு, கரையோரப் பகுதிக்கு அருகாமையில் தாழ்வு பகுதி காரணமாக மழை மேகங்கள் அதிகமாக கூடி உள்ளதாக” தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வேகமாக நகர்ந்து வருகிறது. மேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி நிலவி வருகிறது. சென்னையில் மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Read More : உல்லாசத்தில் மிதந்த கள்ளக்காதல் ஜோடி..!! வீட்டை தாழ்ப்பாள் போட்டு ஊரையே கூட்டிய நபர்..!! கடைசியில் நடந்த பயங்கர ட்விஸ்ட்..!!

English Summary

Pradeep John, a private meteorologist, has warned about the rain situation in Tamil Nadu.

Chella

Next Post

சம்பளம் இல்லாமல், ஆடு மேய்க்கும் பிரபல நடிகரின் மகன்.. மகன் குறித்து மனம் விட்டு பேசிய தாய்..

Tue Nov 12 , 2024
mohanlal-son-takes-care-of-sheep-in-spain

You May Like