நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் சிறப்பு அதிகாரிகள் (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவற்றை இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
- துணை மேலாளர் (Systems) – ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் & டெலிவரி – 187 பணியிடங்கள்.
- துணை மேலாளர் (சிஸ்டம்ஸ்) – இன்ஃப்ரா சப்போர்ட் & கிளவுட் ஆபரேஷன்ஸ் – 412
- துணை மேலாளர் (சிஸ்டம்ஸ்) – நெட்வொர்க்கிங் ஆபரேஷன்ஸ் – 80
- துணை மேலாளர் (சிஸ்டம்ஸ்) – IT ஆர்கிடெக் – 27
- துணை மேலாளர் (அமைப்புகள்) – தகவல் பாதுகாப்பு – 07
- உதவி மேலாளர் (சிஸ்டம்) – 784
- உதவி மேலாளர் (சிஸ்டம்) (Backlog Vacancies) – 14
கல்வி தகுதி:
பணியிடங்களுக்கு ஏற்ப கல்வி தகுதி மாறுபடும். துணை மேலாளர் (சிஸ்டம்ஸ்) பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் பிடெக்/பிஇ -கம்ப்யூட்டர் சயின்ஸ்/ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்ஸ் அல்லது அதற்கு இணையான படிப்புகள் முடித்து இருக்க வேண்டும். 50 சதவித மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். இதே பாடப்பிரிவில் எம்.டெக்/எம்.எஸ்.சி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி குறித்த விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் படித்து தெரிந்து கொள்ளவும்.
சம்பளம் :
1. துணை மேலாளர் (Systems) – ரூ.64,820 – 93,960/-
2. உதவி மேலாளர் (சிஸ்டம்) – ரூ.48,480 – 85,920/-
வயது வரம்பு: துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 25 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 35 க்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவி மேலாளர் பணிக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 21-ஆகவும் அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அரசு விதிமுறைகள் படி வயது உச்ச வரம்பில் இரு பணியிடங்களுக்கும் தளர்வுகள் உண்டு. அதாவது எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் உண்டு.
தேர்வு முறை: ஆன்லைன் முறையில் எழுத்து தேர்வு நடைபெறும். எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு விண்னப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள். இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி? ஆர்வம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் எஸ்.பி.ஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க வரும் 04.10.2024 கடைசி நாள் ஆகும்