fbpx

புதுசா இருக்கே!. ரஷ்யாவில் “பாலியல் அமைச்சகம்”!. இத்தனை சலுகைகளா?. மக்கள் தொகை அதிகரிக்க புதின் பிளான்!

“Ministry of Sex”: ரஷ்யாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியாக ஒரு புதிய அமைச்சகத்தை, “பாலியல் அமைச்சகம்” தொடங்க பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை இன்னும் சில நாட்களில் 3வது ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. இதில் லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்து இருப்பதுடன் பல மில்லியன் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய தகவலின் படி, லட்சத்திற்கு மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் போர் நடவடிக்கையில் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் நீடித்து வரும் போரால் ரஷ்யாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், மக்கள் தொகை வளர்ச்சியை தூண்டுவதற்கான நடவடிக்கையாக, “பாலியல் அமைச்சகம்” என்ற அமைச்சரவை பிரிவை அமைப்பது குறித்து ரஷ்யா திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. அதன்படி, புடினின் ஆதரவாளரும் ரஷ்ய நாடாளுமன்ற குடும்ப பாதுகாப்பு குழுவின் தலைவருமான நினா ஒஸ்டானினா(Nina Ostanina) இந்த பாலியல் அமைச்சகம் தொடர்பான மனுவை ஆராய்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

தம்பதிகளை நெருக்கமான உறவுகளில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கில் இரவு 10 மணி முதல் 2 மணி வரையிலான இணையதள தடை மற்றும் விளக்குகளை அணைப்பது ஆகியவை புதிய விதிகளாக விதிக்கப்படலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வீட்டு வேலை செய்வதற்கு அரசு ஊதியம் வழங்குவதுடன் இந்த ஊதியம் அவர்களின் எதிர்கால ஓய்வூதிய கணக்கில் சேர்க்கப்படும்.

திருமண தம்பதிகளுக்கு தேனிலவு இரவுக்கான ஹோட்டல் கட்டணங்களுக்கு 26,300 ரூபிள் (£208) வரையிலான பொது நிதி பயன்படுத்தப்படலாம். குழந்தை பெறுவதற்கான பணப் பரிசுகள் மற்றும் கல்வி, வீட்டு வசதிக்கான மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு நிதி ஊக்கத்தொகைகளை இளம் தம்பதிகளுக்கு வழங்குவது ஆகியவற்றை இந்த பாலியல் அமைச்சகம் மேற்கொள்ளும் என தெரியவந்துள்ளது.

Readmore: உஷார்!. உணவில் குறைந்த அளவு உப்பு!. இந்த 2 உறுப்புகளும் மோசமாகிவிடும்!. மருத்துவர்கள் எச்சரிக்கை!

English Summary

Why Russia Plans To Launch ‘Ministry Of Sex’? Putin Plans To Fund First Dates & Cut Off Power Supply At Night To Boost Birthrate

Kokila

Next Post

ரூ.11.70 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய ஊட்டி நகராட்சி ஆணையர்...! மடக்கி பிடித்த காவல்துறை

Tue Nov 12 , 2024
Ooty Municipal Commissioner caught with Rs 11.70 lakh bribe money

You May Like