fbpx

பனிக்காலங்களில் ரயில்வே சேவையில் கால தாமதம்…! நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி…!

பனிமூட்டக் காலங்களில் இந்திய ரயில்வே சேவையில் கால தாமதத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நம்நாட்டின் வடக்குப் பகுதிகளில், ஏற்படும் பனிமூட்டங்களிலிருந்து ரயில் பயண சேவையை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக விபத்து ஏற்படுவதைத் தடுப்பது மற்றும் ரயில் சேவையின் கால தாமதத்தைக் குறைப்பது போன்றவற்றில் தனிக் கவனம் செலுத்தப்படும்.

ரயில் இஞ்சின்களில் பனி மூட்டத்தை நீக்கும் கருவிகள் பொருத்தப்படுவது, அதிக ஒலி எழுப்பக்கூடிய கருவிகளை பொருத்துதல், தண்டவாளங்களுக்கு அருகில், வெள்ளைநிற கோடுகள் இடுவது, லெவல் கிராசிங் பகுதிகளில் விசில் சப்தத்தை எழுப்பக் கூடிய கருவிகள் மற்றும் எல்இடி பல்புகளை பொருத்துதல், பிரதிபலிக்கக் கூடிய சிக்மா வடிவிலான சிக்னல் அமைப்பது, 60 கிலோ மீட்டரிலிருந்து 75 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே ரயிலை இயக்குவது போன்ற முக்கிய நடவடிகைகள் மேற்கொள்ளப்படும்.

Vignesh

Next Post

அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் உடல் துண்டான நிலையில் சடலமாக மீட்பு..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

Wed Dec 7 , 2022
திமுக மூத்த அமைச்சர்களில் ஒருவரான துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திமுகவின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம். இவர் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இவரது மகள் பாரதி (55). இவரது கணவர் ராஜ்குமார். இவர்களுக்கு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகளுடன் காட்டிபாடியில் வசித்து வந்தார். பாரதியின் கணவர் ராஜ்குமார் […]
அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் உடல் துண்டான நிலையில் சடலமாக மீட்பு..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

You May Like