fbpx

ராகுல் டிராவிட் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்..!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரரனுமான ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் 85* ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். முதல் ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது போட்டியில் மோதிவருகிறது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், அந்த அணிக்கு எதிராக தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலியா ஆடிவருகிறது. நேற்று தொடங்கிய இரண்டாவது ஆஷஸ் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி சிறப்பாகவே தொடங்கியது.

ஆனால் 73 ரன்களுக்கு பிறகு அடுத்தடுத்த 2 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த ஸ்டீவ் ஸ்மித் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் இறுதிவரை களத்தில் நின்று விளையாடிவரும் ஸ்டீவ் ஸ்மித் முதல் நாள் முடிவில் 85 ரன்கள் அடித்தார். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.

சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 32 ரன்களை அடித்த போது 9,000 டெஸ்ட் ரன்களை கடந்தார். 174 போட்டிகளில் இந்த சாதனையை செய்திருக்கும் ஸ்டீவ் ஸ்மித் அதிவேகமாக 9,000 டெஸ்ட் ரன்களை கடந்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார். அந்த வரிசையில் 172 போட்டிகளுடன் சங்ககரா முதலிடத்திலும், ராகுல் டிராவிட் 176 போட்டிகளுடன் 3ஆவது இடத்திலும், 177 போட்டிகளுடன் பிரையன் லாரா மற்றும் ரிக்கி பாண்டிங் 4ஆவது இடத்திலும் இருக்கின்றனர். ஆனால் விளையாடிய போட்டிகளை மட்டும் எடுத்துக்கொண்டால் 99 போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருக்கும் ஸ்டீவ் ஸ்மித் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். 101 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தி பிரையன் லாரா இரண்டாவது இடத்தில் இருக்கிறார்

Maha

Next Post

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா மாமன்னன்..?

Thu Jun 29 , 2023
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள படம் மாமன்னன். ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை பார்த்த தனுஷ் வெகுவாக படத்தை பாராட்டிய நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் இன்று இயக்குநர் மாரி செல்வராஜையும், உதயநிதியையும் பாராட்டினார். […]
இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படம் என்ன..? நடிகர் யார் தெரியுமா..? வெளியான மாஸ் அப்டேட்

You May Like