ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் தேவேந்திரா. இவரது மூத்த மகள் பிரசன்னா (21). இவர், அதே ஊரை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் பிரசன்னாவின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மகளுக்கு அவசரம் அவசரமாக ஹைதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியருடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து, ஐதராபாத்தில் கணவருடன் சந்தோஷமாக இருந்து வந்தார் பிரசன்னா. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பிரச்சன்னா தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக முன்னாள் காதலனை சந்தித்துள்ளார். பழைய நினைவுகளை பகிர்ந்து இருவரும் காதலை மீண்டும் வளர்த்துள்ளனர். தனிமையில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கணவர் வந்து அழைத்தபோதும் பிரசன்னா செல்ல மறுத்துள்ளார். இதையறிந்த தேவேந்திரா, தனது மகளுக்கு அறிவுரை கூறி கணவருடன் செல்லும்படி கூறியுள்ளார். ஆனால், இதை ஏற்க அவர் மறுத்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த தந்தை பெற்ற மகள் என்று கூட பாராமல் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதையடுத்து, தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், மகளை கொலை செய்த தந்தையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.