fbpx

Tn Govt: தமிழ் அறிஞர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை…! எப்படி விண்ணப்பிப்பது…?

அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழுக்கு தொண்டாற்றிவரும் பெருமக்களுக்கு உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.3,500-ம், மருத்துவப்படியாக ரூ.500-ம் என ரூ.4,000 உதவித் தொகையாக வழங்கப்பெறுகிறது.

தமிழுக்காகத் தம் வாழ்நாளை அர்ப்பணித்துள்ள பெருமக்களுக்கு இந்த உதவித் தொகை அவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ்த் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது. தமிழுக்கு அரும்பணியாற்றி வருவதற்காக உதவித் தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர், அவரின் வாரிசுதாரருக்கு, அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.3,000 வழங்கப்படுகிறது.

மகளிர் உரிமைத் தொகை, சமூகநல பாதுகாப்பு உதவித்தொகை போன்ற தமிழ்நாடு அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது’. விண்ணப்பிப்பவர்கள் 01.01.2024-ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும். இதற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று இணைக்கப்பட வேண்டும்.

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்பப்படிவத்தினை மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் / உதவி இயக்குநர் அலுவலகத்திலேயே நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத்தளத்திலோ கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

English Summary

Stipend for Tamil Scholars Rs.4,000 per month stipend

Vignesh

Next Post

IND vs Ban T20!. மாபெரும் வரலாற்று சாதனை!. வங்கதேசத்தை அலறவிட்ட இந்திய அணி!.

Mon Oct 7 , 2024
For First Time In History, India Win A T20I Match With...

You May Like