வயிற்று புற்றுநோய் பெண்களைவிட ஆண்களை அதிகளவில் பாதிப்பதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகை புற்றுநோய் எப்படி ஏற்படுகின்றன, சிகிச்சை முறைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்
உலக அளவில் மனிதர்களுக்கு வரும் கொடியநோய்களில் இதய நோய்களை அடுத்து புற்றுநோய்களால்தான் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர். 2021 ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு கோடியே எழுபத்து மூன்று இலட்சமாக இருந்த புற்றுநோயாளிகள் எண்ணிக்கை வரும் 2025 ஆம் ஆண்டில் மூன்றுகோடியை நெருங்கிவிடும் என்றும் இந்தியாவில் மட்டும், ஒவ்வொரு 15 பேரில் புற்றுநோயாள் ஒருவர் பாதிப்படைவதாகவும் National Cancer Grid-இன் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும், உலகம் முழுக்க மரணத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணங்களில் புற்றுநோய் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தநிலையில், புற்றுநோய்களில் ஒருவகையான வயிற்றுப் புற்றுநோய் பெண்களைவிட ஆண்களை தான் அதிகளவில் பாதிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இயல்பாகவே வேகமாக வளரும் மற்றும் மிகவும் வீரியம் மிக்க இந்த வயிற்று புற்றுநோய், ஹார்மோன்களில் உள்ள வேறுபாட்டின் காரணமாக ஆண்களுக்கு மிகவும் பொதுவானவையாக இருக்காது. பெண்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் உள்ளது, இது வீக்கத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் வயிற்று புற்றுநோயைக் கண்டறியும் வாய்ப்புகளை குறைக்கிறது. வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள் சில நேரங்களில் மிகவும் தெளிவற்றதாகவும் தவறாகவும் இருக்கலாம். அமிலத்தன்மை மற்றும் வயிற்று வலி போன்ற உணர்வு மிகவும் பொதுவானது மற்றும் நோய் ஆபத்தானக் கட்டத்தை அடையும் வரை அது லேசாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. சில நேரங்களில் இந்த அறிகுறிகள் குறைந்த ஹீமோகுளோபின் அளவுகள், திடீர் எடை இழப்பு அல்லது பசியின்மை குறைதல் ஆகியவற்றைக் குறிக்கும்.
இந்த வகை புற்றுநோய்களில் பெரும்பாலானவை ஆரோக்கியமற்ற உணவு, அதிகப்படியான உப்பு நுகர்வு மற்றும் மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற மோசமான வாழ்க்கை முறை தேர்வுகளுடன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்றும் வயது மற்றும் பரம்பரை காரணங்களும் முக்கிய பங்கு வகிப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த புற்றுநோய்க்கான சிகிச்சைகளில் கீமோதெரபி, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் சில நேரங்களில் இலக்கு சிகிச்சை ஆகியவை அடங்கும்.