fbpx

சசிகலா புஷ்பா வீட்டில் கல்வீசி தாக்குதல்..!! காவல்துறையினர் குவிப்பு..!! பெரும் பரபரப்பு

தூத்துக்குடியில் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா இல்லத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தபால் தந்தி காலணி 8ஆவது தெருவில் வசித்து வருகிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா. பாஜக நிர்வாகியான இவரது வீட்டை மர்ம நபர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதாவது, பூந்தொட்டி மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்து எறிந்து, சசிகலா புஷ்பாவின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சசிகலா புஷ்பா வீட்டில் கல்வீசி தாக்குதல்..!! காவல்துறையினர் குவிப்பு..!! பெரும் பரபரப்பு

அதேபோல் இந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோக்களில் வந்து பெண்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கல் எரிந்து விட்டு தாக்குதல் நடத்தியதாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர். மேலும், அப்பகுதியில் பதற்றம் காணப்படுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சசிகலா புஷ்பா தற்போது நாகர்கோவில் கூட்டத்திற்கு சென்றுள்ளார். அதனால் அவர் வீடு பூட்டப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சிலர் வீட்டை சேதப்படுத்தியுள்ளனர். முன்னதாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று பாஜக தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், பாஜக தலைவர் அண்ணாமலை 24 மணி நேரமும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி பேசும் தகுதி யாருக்கும் இல்லை. மரியாதையாக பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த பண்பு பாஜகவுக்கு இருக்கிறது. ஆனால், ஒருமையில் பேசும் பழக்கம் பாஜகவுக்கு இல்லை என்றார்.

சசிகலா புஷ்பா வீட்டில் கல்வீசி தாக்குதல்..!! காவல்துறையினர் குவிப்பு..!! பெரும் பரபரப்பு

அதன் பிறகு திமுக அமைச்சர் கீதாஜீவன் அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கும் போது மேடையில் ஏறுவோம் என்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சசிகலா புஷ்பா நீங்கள் வீட்டிலிருந்து வெளியே வரும்போது கால் இருக்காது, நாக்கு இருக்காது என்று ஆவேசமாக கூறினார். இந்நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

முன்னாள் மனைவியிடம் தன் குழந்தையை கேட்டு டார்ச்சர் செய்த இளைஞர்! ஆட்களை வைத்து படுகொலை செய்த மனைவி!

Thu Dec 22 , 2022
கோவையில் சரவணகுமார் என்பவர் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இவர் சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவன், மனைவி இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால் சரவணகுமாரின் மனைவி பரத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்திருக்கிறார் இந்த நிலையில் சரவணகுமார் தன்னுடைய குழந்தையை தன்னிடம் கொடுத்து […]

You May Like