வாட்ஸ் அப்பில் மக்களுக்கு மெசேஜ் அனுப்புவதை நிறுத்தும்படி, மத்திய அரசுக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் குறித்து கருத்துகள் கேட்டு விக்சித் பாரத் மூலம் அனுப்பப்பட்ட மெசேஜில் பிரதமர் மோடியின் கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், வாட்ஸ் அப்பில் மக்களுக்கு மெசேஜ் அனுப்புவதை நிறுத்த மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கான விதிகள் அமலில் உள்ள நிலையில், அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்த செய்திகள் பகிரப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Read More : ’அவர் என் மகன் தானா’..? சந்தேகப்பட்டு DNA டெஸ்ட் எடுத்த நடிகர் அப்பாஸ்..!!