fbpx

எமனாக மாறும் நான்-ஸ்டிக் பாத்திரங்கள்.. உடனே நிறுத்திவிடுங்கள்..

தற்போது உள்ள காலகட்டத்தில் நாகரீகம் என்ற பெயரில், பிரச்சனையை விலைகொடுத்து வாங்குகிறோம். அப்படிப்பட்ட ஒரு பொருள் தான், நான்-ஸ்டிக் பாத்திரங்கள். ஆம், நான்-ஸ்டிக் பாத்திரம் இல்லாத வீடே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. இதற்க்கு காரணம் இந்த பாத்திரத்தில் பெரும்பாலும் அடிப்பிடிக்காது, நாம் சுலபமாக கழுவி விடலாம். இப்படி பாத்திரம் கழுவும் போது நாம் மிச்சம் செய்ய நினைக்கும் ஓரிரு நிமிடங்கள், நமது குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறது. ஆம், நாம் நான்-ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவதால் நமது உடலில் என்ன தீமைகள் ஏற்படும் தெரியுமா??

நான்-ஸ்டிக் பாத்திரங்களில் உணவு பொருட்கள் ஒட்டாமல் இருக்க பயன்படுத்தப்படும் இரசாயனம், தண்ணீர் உறிஞ்சாமல் இருக்க பயன்படுத்தப்படும் பேப்ரிக்குகள் நாம் சமைக்கும் உணவில் கொழுப்பு சத்துக்களை அதிகரித்து விடும். இதனால் கெட்ட கொழுப்பு அதிகரித்து, உடல் எடையை அதிகரித்து விடும். நான்-ஸ்டிக் பாத்திரங்களை அதிகம் பயன்படுத்தினால் தைராய்டு, புற்றுநோய் ஏற்படுவதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். நான்-ஸ்டிக் பொருட்களால் பெண்களின் உடலில் பெர் ஃப்ளோரா ஆக்டானிக் ஆசிட் அளவு உயர்ந்து ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவு குறையும். இதனால் மெனோபாஸ் விரைவில் நிகழும்.

மேலும், நான்-ஸ்டிக் பாத்திரங்களில்ன் கீறல் ஏற்பட்டால் அதில் இருந்து மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக்ஸ் நாம் சமைக்கும் உணவில் கலந்து, நம் உடலில் நாளமில்லா சுரப்பிகள் சீர்குலைத்துவிடும். மேலும், கருவுறுதல் பிரச்சினைகளை இது ஏற்படுத்தும். இதனால் நம் முன்னோர்கள் பயன்படுத்திய இரும்பு, மண், செம்பு, பித்தளை ஆகியவற்றால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்த்துவது மிகவும் சிறந்தது.

Maha

Next Post

கெமிக்கல் கலந்த ஹேர் டை வேண்டாம்; இயற்கையான இந்த ஹேர் டை பயன்படுத்தி பாருங்கள்..

Mon Oct 2 , 2023
தற்போது உள்ள காலகட்டத்தில், பல்வேறு காரணங்களால் இளம் வயதிலேயே நரை முடி வந்து விடுகிறது. இதற்கான காரணங்கள் என்னவாக இருந்தாலும், நரை முடி வந்த உடன் தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது. இது இளம்வயது உடையவர்களுக்கு மட்டும் இல்லை, வயதானவர்களுக்கும் தான். என்ன தான் வயதானாலும் தங்களின் முடி வெள்ளையாக இருக்க விரும்புவதில்லை. யாருக்கு தான் வயதான தோற்றத்துடன் இருக்க பிடிக்கும். நாம் நரை முடி இருக்க கூடாது என்று […]

You May Like