fbpx

கதை திருட்டு!!! விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து!!!

உப்பெனா என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் உரிமையை தான் வாங்கவில்லை என நடிகர் விஜய்சேதுபதி தரப்பு விளக்கத்தை ஏற்று, அவருக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் தெலுங்கில் உருவான ‘உப்பெனா’ படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, புஜ்ஜி பாபு சனா படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை தமிழில் மறு உருவாக்கம் செய்யும் ரீமேக் உரிமையை, அந்த படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின், விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் “உலகமகன்” என்ற தனது கதையை திருடி, தெலுங்கில் உப்பெனா என்ற படமாக உருவாகியுள்ளதாகவும், படத்தின் மூலம் ஈட்டிய வருமானத்தில் 50 சதவீதத்தை தனக்கு கொடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் அதன் ரீமேக்கை தமிழில் விஜய் சேதுபதி பட நிறுவனம் தயாரிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி தேனியை சேர்ந்த உதவி இயக்குனர் டல்ஹவுசி பிரபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, விஜய் சேதுபதி தரப்பில், உப்பென்னா திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கவில்லை என்றும், அதற்கான எந்த ஆதாரங்களையும் மனுதாரர் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் விஜய்சேதுபதிக்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் வாதிட்டார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் . மற்றவர்களுக்கு எதிரான வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

Kathir

Next Post

2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் பணம் வழங்கப்படுமா? முக்கிய ஆலோசனையில் முதலமைச்சர் ஸ்டாலின்!

Mon Dec 19 , 2022
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடம் தோறும் தமிழக அரசின் சார்பாக தமிழக மக்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் பரிசு தொகுப்போடு 1000 ரூபாய் பணமும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் சென்ற வருடம் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற நிலையில், பொங்கல் பரிசு தொகுப்போடு 1000 ரூபாய் பணம் வழங்கப்பட்டு வந்தது மட்டும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் […]

You May Like