fbpx

கழிவுகளை மனிதர்களே அகற்ற வைத்தால் கடும் நடவடிக்கை…! இந்த செயலி மூலம் புகார் செய்யவும்…!

கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை தடுத்தல் மற்றும் பணியாளர்களின் மறுவாழ்வு சட்டம் 2013-ன் அமலாக்கம் குறித்து டெல்லியில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த முக்கிய மத்திய சட்டம் 2013 செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை முற்றிலுமாக களைதல் மற்றும் அவர்களுக்கான விரிவான மறுவாழ்வு ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இச்சட்டம் இயற்றப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுகாதாரமற்ற கழிப்பறைகள் குறித்த தரவுகள் மற்றும் கழிவுகளை மனிதர்களே அகற்றுவோர் தொடர்புடைய தரவுகள் குறித்த ஸ்வச்சதா அபியான் என்ற மொபைல் செயலி குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த செயலி மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தால் 24.12.2020 அன்று தொடங்கப்பட்டது. இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். சுகாதாரமற்ற கழிப்பறைகள் அல்லது மனிதர்களே கழிவுகளை அகற்றுதல் குறித்த தகவல்களை யார் வேண்டுமானாலும் இந்த செயலியில் பதிவேற்றம் செய்யலாம்.

கடந்த 3 ஆண்டுகளில் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒவ்வொரு தகவல்களும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டதில், சுகாதாரமற்ற கழிப்பறைகள் அல்லது மனிதர்களே கழிவுகளை அகற்றியதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று குழு தெரிவித்தது.

Vignesh

Next Post

சுபமுகூர்த்த நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்!... தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்!

Fri Jul 7 , 2023
ஜூலை 8 (சனி) மற்றும் ஜூலை 9 (ஞாயிறு) ஆகிய விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு, 800 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்தி அறிக்கையில், வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் […]

You May Like