fbpx

தமிழகமே..! இன்று மாலை 6 வரை தான் டைம்…! மீறினால் 2 ஆண்டு சிறை தண்டனை…!

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு , ஏப்ரல் 19, 2024 வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்க உள்ள நிலையில், அனைத்துத் தேர்தல் பிரச்சாரப் பணிகள் இன்று மாலை 6 மணிக்குள் முடிக்க வேண்டும். மேரி பிரச்சாரம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தேர்தல் தொடர்பாக எந்த ஒரு பொதுக்கூட்டம் அல்லது ஊர்வலத்தை யாரும் கூட்டவோ, நடத்தவோ அல்லது கலந்துகொள்ளவோ கூடாது. ரேடியோ, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற பிற சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், தொலைக்காட்சிகள் மூலமாகவும், தேர்தல் விஷயங்களைப் பொது மக்களுக்கும் யாரும் காட்சிப்படுத்தக்கூடாது. தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும்.

வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்ட, தொகுதி வாக்காளர்களாக இல்லாத அனைத்து அரசியல் பிரமுகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள், மாலை 6 மணிக்கு மேல் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். திருமண மற்றும் சமுதாய கூடங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் விருந்தினர் மாளிகை வளாகத்தில் வெளியாட்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்களா என்பதை கண்டறிய சோதனை செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951ன் பிரிவு 126ன் கீழ், தேர்தல் முடியும் வரை இந்த விதிமுறைகள் அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்‌.

Vignesh

Next Post

’3 நாட்கள் இல்லை.. 6 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை’..!! அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்..!!

Wed Apr 17 , 2024
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் நாள் மட்டுமல்லாமல் மொத்தம் 6 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படவுள்ளது. தேர்தல் பிரச்சாரம் முடியும் நாளான ஏப்ரல் 17, வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 18, வாக்குப் பதிவு தினமான ஏப்ரல் 19 ஆகிய நாட்களில் […]

You May Like