இந்தோனேசியாவில் இன்று 7.0 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் ஜாவா தீவின் வடக்கே கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 4:55 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 594 கிலோமீட்டர் (370 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனினும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.. இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சுமார் 160 கிலோமீட்டர் வடமேற்கில் சுரபயா நகரம் வரை உணரப்பட்டது.. இது நாட்டின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும்.. 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.. மேலும் ஜாவா தீவின் பெரும்பகுதியிலும், பாலி தீவு வரையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
பசிபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” என்று அழைக்கப்படும் எரிமலை வளைய பகுதியில் அமைந்துள்ளதால், இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது.. கடந்த ஆண்டு நவம்பர் மேற்கு ஜாவா மாகாணத்தில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, 602 பேர் உயிரிழந்தனர்.. இதே போல் ஏப்ரல் 3 ஆம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.