சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் தனது காதலனுடன் பேசிக் கொண்டிருந்த மாணவி, பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து, மாணவி அளித்த புகாரின் பேரில் ஞானசேகரனை போலீசார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கோட்டூர்புரம் போலீசார் விசாரணையின் முடிவில், ஞானசேகரன் மீது 8 சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பல்கலைகழகத்தின் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்து, உள் விசாரணை குழுவிடமும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.