fbpx

மாணவர்களே ரெடியா இருங்க..!! உங்களை ஆய்வு செய்யப்போறாங்க..!! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் கண்பார்வை, மூக்கு மற்றும் இடுப்பளவு ஆகியவற்றை ஆய்வு செய்து பட்டியல் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உடல் நலன் சார்ந்த அளவீடுகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அருகில் அல்லது தொலைவில் உள்ள பொருட்களை பார்ப்பதில் குறைபாடு உள்ளதா, கண்கள் சிவந்துள்ளதா, புத்தக வாசிப்பில் வரிகளை தவற விடுகிறார்களா அல்லது மாறுகண் குறைபாடு உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

மேலும், மாணவர்களின் இடுப்பு நீளத்தை பதிவு செய்ய வேண்டும். மாணவர்களின் உயரம் மற்றும் எடையை குறிப்பிட வேண்டும். பற்களில் பழுப்பு நிற கரை உள்ளதா, பாதங்கள் வளர்ந்துள்ளதா என மொத்தம் 42 வகை குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்து அவற்றை செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்று அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Chella

Next Post

அடுத்தடுத்து நிலநடுக்கம்..!! நள்ளிரவில் குலுங்கிய வீடு..!! அலறியடித்து ஓடிய மக்கள்..!! எங்கு தெரியுமா..?

Mon Jul 10 , 2023
அந்தமானில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கில் உள்ள பைசபாத் பகுதியில் இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் […]

You May Like